சிறந்த ஊக்கி அனைத்து செடிகளுக்கும்

சிறந்த ஊக்கி அனைத்து செடிகளுக்கும்....

இதில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து நிறைந்தது...

பூ மற்றும் காய்காய்க்கும் தருணத்தில் மிகவும் சிறந்த ஊக்கி..

இந்த சமயத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் தேவை படும்...

இந்த ஊக்கியை வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...

ஆரஞ்சு தோல் 100 கிராம்
தோட்டம் மண் 1 கை

ஆரஞ்சு தோலை சிறு துண்டுகளாக நறுக்கி டப்பாவில் போட்டு கொள்ளவும்..

1 லிட்டர் தண்ணீரில் ஊற்றி மேலே தோட்டம் மண் தூவிவிடவும்..

மூடி போட்டு மூடி வைக்கவும்..

7 நாட்கள் கழித்து பயன்படுத்தி கொள்ளலாம்..

கரைசலை வடிகட்டி செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றலாம் தெளிக்கலாம்...

1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்....

பிரசன்னா திருச்சி...

Comments