முட்டை ஓடு + வினிகர் ஊக்கி

முட்டை ஓடு + வினிகர் ஊக்கி....

கால்சியம் பாஸ்பேட்.....

முக்கிய ஊட்டச்சத்துக்கள் நைட்ரஜன் (என்), பாஸ்பரஸ் (பி) மற்றும் பொட்டாசியம் (கே) ஆகியவற்றிற்குப் பிறகு. 

கால்சியம் தாவரங்களுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து ஆகும். 

இந்த குறைபாடு காரணமாக காய்கறிகள்  பூக்கல் இலைகள் தாவரங்களில் அழுகும்.

வினிகருடன் சேர்ந்து முட்டை ஓடுகள் அல்லது கடல் ஓடுகளை செய்யலாம்.

இதனால் கால்சியம் சத்துக்கள் உடனடியாக தாவரங்களுக்கு கிடைக்கும்...

மேலும் பூக்கள் அழுகள் மற்றும் உதிர்ந்து போகுதல் கட்டுபடுத்தும்.

செய்முறை..

முட்டை ஓடு 
வினிகர்

1:4 
1 பங்கு முட்டை ஓடு 4 பங்கு வினிகர்

காய்ந்த முட்டை ஓடுகளை நன்றாக நுனுக்கி கொண்டு மிதமான சூட்டில் வைத்து பழுப்பு நிறத்தில் வறுத்து கொள்ளவும். .

பின்னர் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில் போட்டு 4 பங்கு வினிகர் ஊற்றி விடவும்... நன்றாக கலந்து விடவும்.. மூடி மூடாமல் மேலே வைக்கவும் காற்று வெளியே போக வேண்டும்....

வினிகர் சேர்ந்த உடன் கொப்பளித்து காற்று முட்டைகள் வரும்..

2 அல்லது 3 நாட்களில் காற்று முட்டைகள் முழுவதும் நின்று விடும்.. இப்போது இது பயன்படுத்த தயாராகி விட்டது...

இந்த கரைசலை நன்றாக வடிகட்டி கொள்ளவும்....

1 லிட்டர் தண்ணீரில் 1 அல்லது 2  எம்.எல் சேர்த்து கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கவும்...

வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்....

மீதமுள்ள கரைசலை பாட்டிலில் 6 மாதம் சேமித்து வைத்து கொள்ளவும்...

பிரசன்னா திருச்சி...

Comments