டீ போட்ட தூள் தண்ணீர் + அரிசி கலுவிய. தண்ணீர் + காய்கறி தோல் ஊக்கி

டீ போட்ட தூள் தண்ணீர் + அரிசி கலுவிய. தண்ணீர் + காய்கறி தோல் ஊக்கி....

இதில் NPKமற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதிகம் உள்ளது..

இது செடிகள் வளர்ச்சி மற்றும் அதிக பூக்கள் பூக்க காய்கல் காய்க்க உதவுகிறது...

ஜீரோ பட்ஜெட்....

டீ (4 ஸ்பூன்) போட்ட தூளை 250 மில்லி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்...

அரிசி கலுவிய தண்ணீர்...

முக்கியமாக 
வெங்காயம் தோல் 1 கை
பச்சை முட்டை தோல் 4
வாழைப்பழம் தோல் 2

தேவைப்பட்டால்
உங்களிடம் உள்ள காய்கறி தோல்....

தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும்..

10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து கொண்டு எடுக்கவும்...

2 மணி நேரம் கழித்து அதை வடிகட்டி அதில் அரிசி கலுவிய தண்ணீர் மற்றும் டீ தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்....

அனைத்து செடிகளுக்கும் 1 டம்ளர் அளவில் வேரில் ஊற்றலாம்...

வாரம் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்..

பிரசன்னா திருச்சி...

Comments

Post a Comment