கறிவேப்பிலை ஊக்கி

கறிவேப்பிலை ஊக்கி..

உங்கள் தோட்டத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள கறிவேப்பிலை உபயோகபடுத்தி கொள்ளலாம்..

கறிவேப்பிலையில் 
வைட்டமின் ஏ, 
வைட்டமின் பி,
 வைட்டமின் பி2, 
வைட்டமின் சி,
 கால்சியம் 
 இரும்புச்சத்து 

போன்றவை ஏராளமாக நிறைந்துள்ள அற்புத மூலிகையே கறிவேப்பிலை.

இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.. 

கறிவேப்பிலை நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்..

1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் ஊற்றிவிடவும்..

உங்களிடம் ஆக்ஸிஜன் மோட்டார் இருந்தால் வாளியில் பொருத்தவும்..

3 மணி நேரம் கழித்து கரைசலை செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்...

கால்சியம் தாவரங்களுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து ஆகும். 

இந்த குறைபாடு காரணமாக காய்கறிகள்  பூக்கல் இலைகள் தாவரங்களில் அழுகும்....

பிரசன்னா திருச்சி..

Comments