வாழை இலை கரைசல்

வாழை இலை கரைசல்...

வாழை இலையில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், காப்பர் சத்துக்கள் உள்ளது...

இந்த கரைசலில் தண்ணீர் சேர்க்க கூடாது....

பச்சை வாழை இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...

பின்னர் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்...

இப்போது அந்த இலைகள் துறுவல் மாதிரி கிடைக்கும்...

1 பங்கு வாழை இலை

1/4 - 1/2 பங்கு நாட்டு சக்கரை அல்லது வெல்லம்

அரைத்த வாழை இலையில் வெல்ல தூளை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்..

உதாரணமாக சப்பாத்தி மாவு பிசைவது போல்...

பிளாஸ்டிக் டப்பாவில் இந்த பிசைந்த கலவையை போட்டு மூடி வைக்கவும்...

7 நட்கள் கழித்து எடுத்து நன்றாக கலக்கவும்...

தேவையான அளவை எடுத்து வடிகட்டி கொள்ளவும்....

1 லிட்டர் தண்ணீரில் 5-10 எம்.எல் கலந்து தெளிக்கவும்...

மீதி கரைசலை மூடி வைத்து கொள்ளவும்.. 3-6 மாதம் வரை

தேவைபடும் போது வடிகட்டி கலந்து கொள்ளலாம்...

பிரசன்னா திருச்சி...

Comments