அசோலா உற்பத்தி..
அசோலாவில் நிறைய சத்துக்கள் உள்ளது. இதை அனைத்து கால்நடைகள் ஆடு மாடு கோழி பறவைகள் அனைத்திருக்கும் கொடுக்கலாம்...
மேலும் நாமும் சாப்பிடலாம்.. அசோலா அடை தோசை வடை போன்ற பல்வேறு விதமாக உண்ணலாம்...
செடிகளுக்கும் கரைசலாக செய்து தரலாம்..
இதை உற்பத்தி செய்வது மிகவும் எளிது செலவும் குறைவு...
பராமரிப்பு எளிது...
1 கிலோ அசோலா 1 ரூபாய்க்கும் குறைவு.
1 கிலோ அசோலா 1 கடலை புண்ணாக்கிற்க்கு சமம்...
25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்தும், அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாக்கரோட்டின் ஆகிய சத்துகள் உள்ளன.
வைட்டமின் ஏ சத்து உள்ளதால் அசோலா சாப்பிட்ட கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பதால் 5 லிட்டர் பால் கறக்கும் மாடு 6 லிட்டர் வரை உற்பத்தியை அதிகரிக்கிறது.
பாலின் கொழுப்புச்சத்து 10 சதவீதம் வரையும், கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் 3 சதவீதமும் உயருகிறது. பாலின் தரம் பராமரிக்கப்படுகிறது. ஒரு கிலோ அசோலாவை தீவனமாக கறவை மாடுகளுக்கு கொடுத்தால், ஒரு கிலோ பிண்ணாக்கு கொடுப்பதற்குச் சமம்.
ஒரு கிலோ பிண்ணாக்கு ரூ. 40 முதல் ரூ. 45 வரை விற்பனையாகிறது. ஆனால் ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்ய ரூ. 1 மட்டும் செலவாகிறது.
.
பிரசன்னா திருச்சி...
Comments
Post a Comment