தோட்டத்தில் வெங்காயத்தின் பயன்கள்...
சல்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜிங்க், இரும்பு, அயோடின், விட்டமின், மேலும் நிறைய சத்துக்கள் உள்ளன....
வெங்காயம் தோல் மற்றும் கழிவகளை கம்போஸ்ட் உரத்தில் போடலாம்..
மண்புழு உரத்தில் போட கூடாது...
மூடாக்கு வெங்காய தோலை பயன்படுத்தி கொள்ளலாம்...
பூச்சி கொல்லி...
பெரிய வெங்காயம் 1
பூண்டு 4 விழுது
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
பட்டை தூள் 1 ஸ்பூன்
தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்....
பின்னர் 2 பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்..
24 மணி நேரம் ஊறவைக்கவும்...
பின்னர் நன்றாக வடிகட்டி கொள்ளவும்....
1:5 விகிதத்தில் தண்ணீர் கலந்து
10 சொட்டு சோப்பு திரவம் சேர்த்து
தெளிக்கலாம்...
வாரம் இருமுறை தெளிப்பதினால் அனைத்து பூச்சிகளையும் கட்டுபடுத்தும்....
அஃபிட்ஸ், மாவுபூச்சி, வெள்ளை பூச்சி, மேலும் அனைத்து பூச்சிகளையும் கட்டுபடுத்தும்...,
இது சிறந்த பூச்சி கொல்லி.
இந்த கலவையை குளிர் சாதண பெட்டியில் வைத்து சேமித்து கொள்ளலாம்...
வெங்காயம் தோல் கரைசல்...
முறை 1:
வெங்காயம் தோலை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்...
குளிர்ந்த பிறகு செடிகளுக்கு ஊற்றலாம்...
முறை 2:
வெங்காயம் தோலை தண்ணீர் ஊறவைப்பது...
24 மணி நேரம் கழித்து வடிகட்டி கொள்ளவும்..
செடிகளுக்கு அப்படியே ஊற்றலாம் இல்லை 1:1 தண்ணீர் சேர்த்து ஊற்றலாம்..
வேர் வளர... கட் செய்த கிளைகளில் புதிய வேர் வளர உதவுகிறது...
1 கப் தண்ணீரில் இரண்டு இலவங்கப்பட்டை 24 மணி நேரம் ஊறவைக்கவும்..
வெங்காயம் துண்டு
சிறிய சோற்றுகற்றாலை சதை
இந்த ஊறவைத்த தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்...
வடிகட்டி கொள்ளவும்...
இதில் கட்டிங் செய்த கிளைகள் மற்றும் நாற்றுகளை நினைத்து பதியம் செய்யவும்..
இது அதிக அளவில் வேர் வளர உதவுகிறது...
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment