தக்காளி செடியில் இருந்து எப்படி புது செடி உருவாக்குவது

தக்காளி செடியில் இருந்து எப்படி புது செடி உருவாக்குவது......

நமது தோட்டத்தில் உள்ள தக்காளி செடியில் காய்பது குறையும் போது அதில் இருந்து புதிய செடிகளை உருவாக்கலாம்.  

இதனால் நமக்கு விதை மிச்சம..

மேலும் 20 நாட்களில் வளரும் செடியை 4 நாட்களில் கிடைக்கும்...

இதனால் நமக்கு சீக்கிரமே தக்காளி அறுவடை செய்யலாம்...

இந்த முறையில்....

நன்றாக பச்சையாக உள்ள கிளைகளை கட் செய்து கொள்ளவும்...

அதில் மேலே 4 இலைகளை விட்டு மீதியை நீக்கி கொள்ள வேண்டும்..

சோற்றுகற்றாலை தண்ணீரீல் 30 நிமிடம் வைக்க வேண்டும்...

இதனால் வேர் விடும் வளர்ச்சி உந்தபடும்...

பிறகு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் கட்டிங் செய்த தக்காளி கிளைகளை வைக்கவும்..

நிழலில் வைக்க வேண்டும்..

4 நாட்கள் ஒருமுறை தண்ணீரை மாற்றவும்..

தேவைபட்டால் சத்துக்களுக்காக சிறிது தொழுஉரம் கரைசலை தண்ணீரீல் கலந்து கொள்ளுங்கள்...

நன்றாக வேர் வளர்ச்சி அடைந்த பிறகு தொட்டியில் நடவு செய்யுங்கள்..

மிக விரைவில் பூ பூக்கும்.. 

புதினா செடி வளர்ப்பது போன்று தான்....

பிரசன்னா திருச்சி..

Comments