கொத்தமல்லி செடி நன்றாக முளைத்து வளர....
நல்ல கொத்தமல்லி விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும்....
கொத்தமல்லி விதைகளை இரண்டாக்கி கொள்ளவும்..
1..
இதற்கு ஒரு துணியில் கொத்தமல்லி விதைகளை பரவலாக போட்டு மேலே துணி போட்டவும்..
பின்னர் சப்பாத்தி உருளையை இதன் மேல் மெதுவாக உருட்டவும்.. விதைகள் இரண்டாகிவிடும்...
இதனால் விதைகள் குறைவாக சேதமாகுது...
2.....
கொஞ்சம் விதைகள் என்றால் உப்பு காகிததில் பரப்பி விதைகள் மேலே உப்பு காகிதத்தில் மெதுவாக தேய்க்கவும்.
இந்த முறையில் விதைகள் சேதமாகுது விதைகளின் முளைப்பு திறன் அதிகமாக இருக்கும்.....
விதைகளை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்...
மண் கலவையில் 50% மண் 20% மண்புழுஉரம் 30% தொழுஉரம்..
தொட்டியில் பரவலாக விதைகளை தூவி சிறிது மண் கலவையை தூவி மூடவும்..
தினமும் தண்ணீர் ஊற்றி தெளிக்கவும்..
ஈரப்பதம் எப்போதும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment