கொத்தமல்லி நன்றாக வளர.....
அகலமான தொட்டி ( 20 இன்சு) உயரம் குறைவாக...
50% தோட்ட மண்
20% மண்புழு உரம்
30% மக்கிய மாட்டு சாணம்
மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.. தெட்டியில் நிறப்பவும்..
கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து கொண்டு தொட்டியில் சீராக போடவும்..
தண்ணீர் தெளிப்பான் மூலம் தேவையான அளவு தண்ணீர் தெளிக்கவும்...
பின்னர் மேலே சீராக மண் போட்டு விதை மறையும் அளவில் போடவும்....
5 நாளில் முளைக்கும்
9 நாளில் நன்றாக இலைகள் முளைத்திருக்கும்...
12 நாளில் ஆர்கானிக் கம்போஸ்ட் உரம் அல்லது மண்புழுஉரம்
தொட்டி முழுவதும் சீராக போடவும்.. பிறகு தண்ணீர் தெளிக்கவும்..
21 நாளில் மண்புழுஉரம் போட்டு தண்ணீர் தெளிக்கவும்....
30 நாளில் அறுவடை செய்யலாம்..
அறுவடை கத்திரிகோல் மூலம் 2 இன்சு விட்டு கத்திரிக்கவும்...
அறுவடை செய்த பிறகு மண்புழுஉரம் போட்டு தண்ணீர் தெளிக்கவும்...
இதேபோல் 3 முறை அறுவடை செய்யலாம்...
10 நாள் ஒருமுறை மண்புழுஉரம் கொடுக்கவும்.....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment