டிரகன் பழம்

டிரகன் பழம்...

அனைத்து வறண்ட நிலங்களிலும் வளரும். களர் நிலங்களில் சரியான பலன் கிடைக்காது.

சாதாரண மண் கலவை போதுமானது.

கல் அல்லது சிமெண்ட் தூண்களைத் தரைக்கு மேல் சுமார் ஆறு அடி உயரம் இருக்குமாறு நட்டு அதன் தலை பகுதியில் வட்ட வடிவில் சக்கரம் போன்று இரும்பு கம்பிகளை வளைத்து வெல்டிங் செய்து மாட்டி விடவேண்டும்..

அந்த கம்பிகள் இந்த கள்ளிக் கொடிகளைத் தாங்கி நிற்கின்றன.

இயற்கை முறைப்படி மண்புழு உரம் அல்லது தொழுஉரம் இட்டாலே போதுமானது. அதிக சத்துக்கள் அளிப்பதன் மூலம் திரட்சியான பழங்கள் கிடைக்கும்.

நீர்ப்பாசனம் இவற்றிற்கு தேவைப்படாது. அதிக வறட்சி இருக்கும் சமயத்தில் பாசனம் அளிக்கலாம். பூச்சி தாக்குதல் அறவே கிடையாது.

நடவு செய்த ஒரு வருடத்தில் பூக்கள் தோன்றும். இவை கள்ளிச் செடிகள் போன்று இரவு நேரத்தில் பூக்க ஆரம்பிக்கும். லேசான மணம் கொண்டது. மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

பூக்கள் தோன்றிய பின்னர் சுமார் நாற்பது நாட்களுக்குள் பழங்கள் தோன்றும். பழுத்த பழங்கள் சிவப்பு நிறத்தில் மிக வசீகரமாக இருக்கும். முற்றிய தண்டு பகுதிகளை கவாத்து செய்து புதிய செடிகள் உருவாக்கலாம்.

இந்த பழம் குணமும் மணமும் சுவையும் நிறைந்தது. கிவி  மற்றும்  பேரி  பழங்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்த காக்டெயில் சுவைகொண்டது.  

டிராகன் பழத்தின் இன்னொரு பெயர் வெண்தசை பித்தாயா. 

மூன்று நிறத்தில் உள்ளது வெள்ளை, சிகப்பு, மஞ்சள்..

வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சொல்லிக்கொள்ளும் அளவில் உள்ளன.  

வைட்டமின் ‘சி’  காரட்டில் இருப்பதைக் காட்டிலும்  3  மடங்கு   அதிகம்.  100  கிராம் பழத்தில் அடங்கியுள்ளது,  

100  கிராம்  டிராகன் பழத்தில்  3  கிராம்  நார்ச்சத்தும் கொஞ்சம் கூடுதலாகவே  இரும்புச் சத்தும்  நீர்ச்சத்து 87 சதம் உள்ளன.  
 கலோரிசத்து குறைவான அளவே  உள்ளது. 

ஹைலோசெரியஸ்  அண்டேட்டஸ் (Holocereus undatus) என்பது இதன் தாவரவியல் பெயர். கேக்டேசியே  தாவர குடு ம்பத்தைச் சேர்ந்தது.  ஒரு வகையான  கொடிவகை  சப்பாத்தி.  20 அடி நீளம் வரை கொடிகள்  ஓடும். 

நைட்  குயின் என்றும்,  மூன்பிளவர் என்றும்  அழைக்கும் இதன் பூக்கள் ரம்மியமான  மணம் கொண்டவை.  மலரும் முன் சமைக்கலாம்.

கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் நமது எலும்பு மற்றும் ரத்த  ஓட்டத்திற்கு மிகவும் நல்லது. 

இந்தப் பழம் சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் என்ற சிக்கலே இருக்காது. இதற்குக் காரணம் இதில் இருக்கும் உபரியான நார்ச் சத்து.  

டிராகன் பழத்தை தமிழில்  நறுகண்பழம்,  அகிப்பழம் என அழைக்கலாம்.

பிரசன்னா திருச்சி..

Comments