செடிகளில் எறும்புகளை விரட்ட....
முறை 1...
மஞ்சள் தூள், இலவங்கப் பட்டை
சம அளவு எடுத்து நன்றாக கலந்து செடியை சுற்றி தூவிவிடவும்...
15 நாள் ஒரு முறை பயன்படுத்தி கொள்ளலாம்...
முறை 2....
எலுமிச்சை தோல் புதிது 4 பழத்தோல்
(சாத்துக்குடி தோல் புதிது
ஆரஞ்சு தோல் புதிது - கிடைத்தால் சேர்த்து கெள்ளளாம்)
பூண்டு 20 பல்
புதினா 1 கை
வேப்பிலை 1 கை
இவை மூன்றையும் அரைத்து எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பழதோல்களை சிறிய துண்டுகளாக போடவும்..
24 மணி நேரம் கழித்து எடுத்து வடிகட்டி தெளிப்பான் மூலம் செடிகள் மீது தெளிக்கலாம்...
முறை 3:
படிகாரம் கல் தூள்
1/12 லிட்டர் தண்ணீரில் 1\2 ஸ்பூன் படிகார தூள் போட்டு நன்கு கலந்து கொண்டு
செடியை சுற்றி தேவையான அளவு ஊற்றவும்..
செடிகள் மீது தெளிக்க கூடாது..
15 நாள் ஒருமுறை பயன்படுத்தலாம்....
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment