மீன் அமினோ அமிலம்

மீன் அமினோ அமிலம்.

இது தாவரங்களுக்கு தேவையான மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.


தேவையான பொருட்கள்.

5 கிலோ மீன் கழிவுகள்,
1 கிலோ கனிந்த வாழைப்பழம்,
6 கிலோ நாட்டு சர்க்கரை,
ஒரு காற்றுப்புகாத பிளாஸ்டிக் பக்கெட்.

தயாரிக்கும் முறை;

5 கிலோ மீன் கழிவுகள் 
1கிலோ சிறு துண்டுகளாக நறுக்கிய கனிந்த வாழைப்பழம்.
6 கிலோ நாட்டு சர்க்கரை.

இவை மூன்றையும் இந்த காற்று புகாத பிளாஸ்டிக் பக்கெட்டில் நிரப்பி நன்கு இருக்கமாக மூடி 21 நாள் நிழலில் வைத்து பாதுகாக்க  வேண்டும். 

தினமும் ஒரு முறை நன்கு கலக்கி விட வேண்டும். 

மீன் கழிவுகளும் நாட்டுச் சர்க்கரையும் நன்றாக நொதித்து 22-ம் நாள் மீன் அமினோ அமிலம் பயன்படுத்துவதற்கு தயார் ஆகி விடும்.

 வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் 30ml மீன் அமினோ அமிலம் கலந்து தாவரங்களின் மீது தெளிக்கலாம் அல்லது வேர்களிலும் ஊற்றலாம்.

காற்று புகாதவாறு நிழலில் வைத்து பாதுகாத்தால் ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்..

பிரசன்னா திருச்சி..

Comments

Post a Comment