எந்தவொரு பூச்சிகளையும் சமாளிக்க பூச்சிக்கொல்லி......
பப்பாளி இலை 500 கிராம்
லெமன்கிராஸ் 500 கிராம்
தண்ணீர் 10 லிட்டர்
உங்கள் தேவையான அளவு விகிதத்தில் எடுத்து கொள்ளுங்கள்...
இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...
பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் ஊற்றி இலைகளை கலந்து விட்டு 24 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் வடிகட்டி 1:2 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொண்டு தெளிக்கலாம்...
பூச்சி தாக்குதல் இருந்தால் தொடர்ந்து அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் தெளிக்கவும்...
பூச்சி தாக்குதல் இல்லை என்றால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்...
இதனால் அனைத்து வகையான பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்....
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment