துவரை செடி வளர்ப்பு....
உங்கள் வீட்டுக்கு தேவையான துவரம்பருப்பு நீங்களே எளிதாக உற்பத்தி செய்யலாம்...
ஆடிப்பட்டம், புரட்டாசிப்பட்டம் மற்றும் கோடைப்பருவகாலங்களில் துவரை பொதுவாக சாகுபடி செய்யலாம்..
செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
உங்கள் தொட்டி கலவையில் தொழுஉரம் செம்மண் சேர்த்து கொள்ளுங்கள்...
தொட்டி அளவு 24 செ.மீ அளவுள்ள பைகளை பயன்படுத்தி கொள்ளலாம்..
தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைநேர்த்தி செய்து குழித்தட்டு மற்றும் பாலித்தீன் பைகளில் வளர்த்து நடவு செய்யலாம்.
அக்குழிகளில் மக்கிய தென்னை நார்க் கழிவுகள் மற்றும் மணல் நிரப்ப வேண்டும். தட்டில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி வேர்கள் அழுகி விடாமல் இருக்க 3 முதல் 4 துளைகள் போட வேண்டும்.
முளைத்த 10ஆம் நாளில் வீரியமான நாற்றை மட்டும் வைத்துவிட்டு, வலுவிழந்த நாற்றினை நீக்கிவிடவும்..
இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட குழிதொட்டியை நிழலான இடங்களில் வைத்து 30-40 நாட்களில் நடவுக்கு பயன்படுத்தலாம்.
நடுவதற்கு சில நாட்களுக்கு முன் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து பின் நடவு செய்வது நல்லது.
நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின் மண்ணின் ஈரத்திற்கேற்ப தண்ணீர் பாசனம் செய்யலாபம்.
நடவு செய்த 30ஆம் நாள் ஜீவாமிர்த கரைசல் அல்லது வேர கரைசலை தரவேண்டும்.
பூக்கும் தருணத்தில் பஞ்சகாவ்யா கரைசலை அல்லது தேமோர் கரைசல் அல்லது பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள கரைசலை இலை வழியாக 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாகும்.
நடவு நட்ட 20 முதல் 30 நாட்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன்
தொழுஉரம் மண்புழு உரம் கொடுத்து தண்ணீர் ஊற்றி விடவும்..
நடவு செய்த 20-30 நாட்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு நுனி குருத்தைக் கிள்ளி விடவேண்டும்.
சரியான நேரத்தில் மண் அணைத்துக் கொடுக்க வேண்டும். பூச்சிகள் ஏதேனும் தென்பட்டால், வேப்பம் கொட்டை கரைசல், மற்றும் பூண்டு கரைசல் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.
3 -4 மாதங்களில் பூ பூக்கும்..
5-6 மாதங்களில் அறுவடை செய்யலாம்..
அறுவடை.செய்த காய்களை 2 – 3 நாட்களுக்கு குவியலாக வைத்திருந்து பின்பு உலர்த்த வேண்டும்.
பின்பு முழு பருப்பை உடைத்தால் துவரை பருப்பு உங்கள் வீட்டுக்கு ரெடி...
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment