இலைகள் பூச்சி விரட்டி

சூப்பர் கசாயம்...

பல்நோக்கு பூச்சிக்கொல்லி,  உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி...

சீதாபழ இலை
வேப்பிலை
சோற்றுகற்றாலை
ஊமத்தன் இலை
புங்கன் இலை
நெய்வேலி காட்டாமணக்கு
யூகலிப்டஸ்
நாவல் மரம்
சப்போட்டா
வில்வ இலை
எருக்கன் இலை
பப்பாளி இலை
கொய்யா இலை
மாதுலை இலை
ஆரஞ்சு இலை
அரளி இலை
துளசி
மருதாணி
மா இலை
முருங்கை இலை
ஆவாரம் பூ இலை

இவற்றில் ஏதேனும் 10 இலைகள் அல்லது அதற்க்கும் மேல்..

ஓவ்வொரு இலையில் 100 கிராம்

பூண்டு 50 கிராம்

பச்சை மிளகாய் 50 கிராம்

அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...

தண்ணீர் 8 லிட்டர்

பிளாஸ்டிக் மூடி போட்ட வாளியில் அனைத்து பொருட்களையும் போட்டு. கலந்து தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்கவும்...

பின்னர் கோமியம் 200 எம்.எல் கலந்து கொண்டு மூடி நிழலில் வைக்கவும்...

30 நாட்கள் தினமும் ஒரு முறை நன்றாக கலந்து விடவும்.

31 நாள் பயன்படுத்தி கொள்ளலாம்...

1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்...

15 நாள் ஒருமுறை பயன்படுத்தவதால் பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தலாம் மேலும் இது செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படும்...

இந்த கரைசலை 6 மாதம் வரை வைத்து கொள்ளலாம்...

வாட்டர் பாட்டில் நன்றாக மூடி சேமித்து வைத்து கொள்ளவும்..

பிரசன்னா திருச்சி....

Comments