கீரைகள் வளர்ப்பு

கீரைகள் பயிரிட....

மண்கலவை..

2 பங்கு தோட்டம் மண்
1 பங்கு மணல்
1 பங்கு தொழுஉரம்
1 பங்கு கம்போஸ்ட்
வேப்ப புண்ணாக்கு 1 கை அல்லது தேவையான அளவு
உயிர் உரங்கள் தேவையான அளவு ( அசோஸ்பயிரனம், சூடோமோனஸ், டைரகோடைரமா)

அனைத்தும் கலந்த கலவை மண்...

கண்டிப்பாக விதை விதைத்த 7 நாள் முதலில் வேப்ப எண்ணெய் வாரம் ஒருமுறை தெளித்து வரவும் தொடர்ந்து...

1 லிட்டர் 2 எம்.எல் என்ற விகிதத்தில்

3 வாரங்கள் மேல் 5 எம்.எல் என்ற விகிதத்தில்...

இதனால் அனைத்து வகையான பூச்சி தொல்லைகளையும் கட்டுபடுத்தலாம்...

அரிசி கழுவிய தண்ணீர், சாதம் வடித்த தண்ணீர், காய்கறிகள் கழுவிய தண்ணீர், மீன் தொட்டி தண்ணீர் கீரைகளுக்கு ஊற்றலாம்..

இதில் நைட்ரஜன் சத்துக்கள் அதிகம் உள்ளது... கீரைகளுக்கு நைட்ரஜன் சத்துக்கள் தான் அதிகம் தேவை...

தண்ணீரை பூ வாளி மூலம் ஊற்றுவது சிறந்தது..

பெரும்பாலான கீரைகளுக்கு வெயில் அதிகம் தேவை.. அதனால் நேரடியாக வெயிலில் படுமாறு வைக்கவும்...

பிரசன்னா திருச்சி...

Comments