சூப்பர் டானிக் செடிகளுக்கு

சூப்பர் டானிக் செடிகளுக்கு....

சோற்றுக்கற்றாழை 1 கிலோ
வெல்லம் அல்லது நாட்டு சக்கரை அல்லது கடலை புண்ணாக்கு 1 கிலோ
மண் பானை
மூடி
10 லிட்டர் தண்ணீர்...

செய்முறை..

பானையில் தண்ணீர் நிரப்பி வெல்லம் சேர்த்து 2 மணிநேரம் விடவும்...

சோற்றுக்கற்றாழை சிறிய.துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்...

2 மணி நேரம் கழித்து சோற்று கற்றாழையை பானை யில் கழக்கவும்...

பானை மூடி போட்டு நிழலில் வைக்கவும்.. 7 நாட்கள்..

தினமும் 5 நிமிடம் கழக்கவும்....

8 நாளில் பயன்படுத்தலாம்...

நன்றாக கழக்கி வடிகட்டி செடிகளுக்கு தேவையான அளவு வேரில் ஊற்றலாம்.. தெளிக்கலாம்...

1 : 3 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொண்டு பயன்படுத்தவும்....

15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்.....

இந்த கரைசல் செடிகளின் வளர்ச்சிக்கும் அதிக பூ பூக்கவும் அதிக காய் காய்கவும் பயன்படுகிறது....

பிரசன்னா திருச்சி....

Comments

Post a Comment