வேப்பிலை பூச்சி கொல்லி

வேப்பிலை பூச்சி கொல்லி....

அனைத்து விதமான பூச்சி தாக்குதல் இருந்து கட்டுபடுத்தலாம்....

தேவையான பொருட்கள்..

பச்சை வேப்பிலை 100 கிராம்
மஞ்சள் (பச்சை) 50 கிராம்
தண்ணீர் 1 லிட்டர்

வேப்பிலை சிறு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..

மஞ்சலை அரைத்து கொள்ளவும்...

இரண்டையும் கலந்து தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 20 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ளவும்...

பிறகு அதை மூடி 24 மணி நேரம் வைக்கவும்...

பின்னர் வடிகட்டி 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கவும்...

15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்....

பிரசன்னா திருச்சி...

Comments

Post a Comment