இலை மக்கும் உரம்

இலை மக்கும் உரம்....



இந்த உரம் பயன்படுத்தினால் தொழுஉரம் மண்புழு உரம் தேவையில்லை...

இதில் அதிக அளவு நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் நுண்ணுட்ட சத்துக்கள் பேரூட்ட சத்துக்கள் உள்ளது....

உதிரும் இலையை சேகரித்து கொள்ளவும்..

குறிப்பாக வேப்பிலை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள் கிடைத்தால்..

வேப்பிலை யில் அதிக சத்துக்கள் மற்றும் பூச்சி கொல்லி யாகவும் பயன்படும்..

எல்லா இலைகளும் எடுத்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்..

செடி வளரும் பை அல்லது செடி வளரும் டிரை பை அல்லது தொட்டி

இலைகள்

WDC கரைசல் ( சீக்கிரம் மக்குவதற்க்காக 40 நாளில்)

சூடோமோனஸ், டைரக்கோடிராமா, நன்கு புளித்த மோர் ( மக்க நாட்கள் அதிகம் ஆகும் 90 நாள் முதல்)

தோட்ட மண்

இரண்டு வழிகளில் செய்யலாம்...

1. WDC கரைசல் மட்டும்.. 1 லிட்டர்க்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும்...

 அல்லது

2. புளித்த மோர் மற்றும் சூடோமோனஸ், டைரக்கோடிராமா பவுடர்...

முதலில் பையில் மண்ணை 1 வரிசை போடவும் பிறகு WDC கரைசலை தெளிக்கவும்...

அடுத்து இலைகளை 1 வரிசை பிறகு WDC கரைசலை தெளிக்கவும்...

அடுத்து மண்ணை 1 வரிசை போடவும் பிறகு WDC கரைசலை தெளிக்கவும்...

அடுத்து இலைகளை 1 வரிசை பிறகு WDC கரைசலை தெளிக்கவும்...

கடைசியில் மண்ணை போட்டு தண்ணீர் தெளித்து அனைத்து விதமான செடிகள் நடவு செய்யலாம்..
 
கீரை போடலாம்..

தக்காளி செடி வைத்தால் சிறப்பு.. இந்த உரம் 40 நாட்களில் மக்கிவிடும் தக்காளி காய்கும் தருணத்தில் அதற்கு தேவையான அனைத்து சத்துக்கள் கிடைக்கும்... நன்றாக அதிக விளைச்சல் வரும்...

இந்த உரம் தயாரிக்க ஈரபதம் முக்கியம் தேவையான அளவு தண்ணீர் தினமும் ஊற்ற வேண்டும்..

உரம் தயார் செய்யும் போது பயிர் செய்வதால் பயிர் வளர்ச்சி அடையும் போது உரம் மக்கி சத்துளை தருகிறது...

Comments