WDC gel மூலம் தயாரிக்கும் முறை.....
மண்ணில் உள்ள சத்துக்களை செடிகளுக்கு எடுத்து தரும்..
WDC கம்போசர் 1 பாட்டில் ஜெல்
வெல்லம் / நாட்டு சக்கரை 2 கிலோ
தண்ணீர் 200 லிட்டர்
பிளாஸ்டிக் டிரம் 1
அனைத்தையும் நன்றாக கலக்கி நிழலில் வைத்து துணி போட்டு மூடி வைக்கவும்...
துணியை கயிறு கொண்டு கட்டி வைக்கவும்...
5 நாள் தினமும் காலை மற்றும் மாலையில் வலது பக்கமாக மட்டும் 20 - 40 தடவை கலக்கவும்....
6 வது நாள் முதல் பயன்படுத்தலாம்...
அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தெளிப்பது சிறந்தது....
அளவு விகிதம்..
தண்ணீர் 3 பங்கு WDC 1 பங்கு கலந்து தெளிக்கவும்...
வாரம் ஒருமுறை தெளிக்கலாம்...
200 லிட்டர் கலவையில் 20 லிட்டர் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீண்டும் 180 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வெல்லம் சேர்த்து மீண்டும் 5 நாட்கள் வைத்து பயன் பெறலாம்...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment