எறும்புகளை விரட்ட.. பூச்சிகளை கட்டுப்படுத்த......
புதினா 1 கை
வேப்பிலை 2 கை
பூண்டு 1 முழு பூண்டு
எலுமிச்சை பழ தோல் 5
பழைய புதினா பூண்டு பயன்படுத்தி கொள்ளலாம்....
புதினா பூண்டு வேப்பிலை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்...
ஒரு பைக்கட்டில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் அரைத்ததை போட்டு கொண்டு எலுமிச்சை பழ தோலை துண்டுகளாக நறுக்கி போடவும்...
நன்றாக கலந்து கொண்டு 24 மணி நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி கொள்ளவும்...
செடிகளில் மீது தெளிப்பான் மூலம் தெளித்து விடவும்..
தொட்டி சுற்றிலும் சிறிது ஊற்றிவிடலாம்...
இவ்வாறு செய்வதினால் எறும்புகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்....
வாரம் ஒருமுறை கூட பயன்படுத்தி கொள்ளலாம்...
பிரசன்னா திருச்சி..

Comments
Post a Comment