காலிபிளவர் வளர்ப்பு....
காலிபிளவர் வளர்க்க ஏற்ற காலம் குளிர் காலம் மழை காலம் தொடங்கும் போது விதைகள் விதைப்பது சிறந்தது..
வெப்ப நிலை 25-30 தாங்கி வளரும்....
தொட்டி நீலம் 2 அடி அகலம் உயரம் 1 அடி அதிகமாக உள்ளதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.....
மண்கலவை..
25% தொழுஉரம்
25% மண்புழு உரம்
30% மண்
20% தேங்காய் நார் கழிவு
மணல் வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளலாம்...
விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கவும்....குழி தட்டு அல்லது சிறிய பைகளில் விதைக்கலாம்..
6 நாளில் முளைத்து வரும்...
30 நாளில் செடி நன்றாக வளர்ச்சி இருக்கும் இப்பொழுது பெரிய தொட்டியில் நடவு செய்யவும்....
நன்றாக வளர்ந்த நாற்றுகளை தேர்ந்தெடுத்து தொட்டிக்கு 5 வீதம் சீரான இடைவெளியில் நடவும்...
நடவு செய்த 6 நாட்கள் வெயில் குறைவாக உள்ள இடத்தில் வைக்கவும்..
அதன் பின்பு வெயிலில் வைக்கலாம்..
3-4 நாட்கள் ஒருமுறை தண்ணீர் கொடுக்கலாம்..
ஒவ்வொரு15 நாளும் ஊக்கி கரைசலை கொடுக்கவும்... மற்றும் பூச்சி கொல்லி அடிக்கவும்.
30 நாள் ஒருமுறை மண்புழு உரம் தூவிடலாம்.
80 நாளில் பூ பூக்கும்....
பூவின் வளர்ச்சிக்கு ஏற்ப 105 நாளில் இருந்து அறுவடை செய்து கொள்ளலாம்......
பிரசன்னா திருச்சி...

Comments
Post a Comment