மஞ்சள் வளர்ப்பு....
தொட்டி 12 இன்ச் மேல் பயன்படுத்தி கொள்ளலாம்.....
கோடையிலும் பயிரிடலாம்... 9 மாத பயிர்.....
30-45 வரை வெப்பத்தை தாங்கும்..
மண்கலவை..
20% தொழுஉரம்
30% மண்புழு உரம்
20% மணல் அல்லது தேங்காய் நார் கழிவு
30% மண்
நன்றாக விளைந்த மஞ்சள் இருந்து விதைகளை எடுக்கவும்...
மஞ்சள் துண்டில் 2 அல்லது 3 மொட்டுகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்து கொள்ளவும்..
24 மணி நேரம் தண்ணீரீல் ஊறவைத்து கொள்ளவும்....
விதைகளை விதை நேர்த்தி செய்து கொள்ளவும்....
வெள்ளை பிளாஸ்டிக் பையில் விதைகளை போட்டு கட்டி நிழலில் வைக்கவும்...
10- 15 நாளில் முளைத்து வரும்...
பின்னர் பிளாஸ்டிக் பையில் இருந்து எடுக்கவும்...
இப்பொழுது பெரிய தொட்டியில் நடவு செய்யவும்....
5 செ.மீ ஆளத்தில் ஊன்றவும்...
முளை பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைக்கவும்..
வெயில் தொட்டியை வைக்கவும்...
45 நாள் இலைகள் வளர்ந்திருக்கும்...
9 மாதத்தில் அறுவடை செய்யலாம்... இலைகள் காய்ந்து சாய்ந்து விடும்..
ஒவ்வொரு15 நாளும் ஊக்கி கரைசலை கொடுக்கவும்... மற்றும் பூச்சி கொல்லி அடிக்கவும்.
30 நாள் ஒருமுறை மண்புழு உரம் அல்லது உரகலவை தூவிடலாம்.
பிரசன்னா திருச்சி......

Comments
Post a Comment