மாதுளை வளர்ப்பு....
தொட்டி 15 இன்ச் மேல் பயன்படுத்தி கொள்ளலாம்.....
மண்கலவை..
20% தொழுஉரம்
30% மண்புழு உரம்
30% மணல் அல்லது தேங்காய் நார் கழிவு
20% மண்
நன்றாக விளைந்த பழத்தில் இருந்து பழத்தை பிரிக்கவும்....
6 பழ முத்துகளை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் நினைத்து. ஒரு சிறிய துணியில் போட்டு கைகலால் மெதுவாக தேய்க்கவும்...
இதனால் சதை பகுதி நீங்கி விதை கிடைக்கும்...
விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்கவும்.... சிறிய பைகளில் விதைக்கலாம்..
4- 12 நாளில் முளைத்து வரும்...
30 நாளில் செடி நன்றாக வளர்ச்சி இருக்கும் இப்பொழுது பெரிய தொட்டியில் நடவு செய்யவும்....
நன்றாக வளர்ந்த 5 -6 நாற்றுகளை தேர்ந்தெடுத்து ஒன்றாக ஒரே தொட்டயில் நடவும்...
நடவு செய்த 6 நாட்கள் வெயில் குறைவாக உள்ள இடத்தில் வைக்கவும்..
அதன் பின்பு வெயிலில் வைக்கலாம்..
ஒவ்வொரு15 நாளும் ஊக்கி கரைசலை கொடுக்கவும்... மற்றும் பூச்சி கொல்லி அடிக்கவும்.
6 மாதத்தில் செடி நன்றாக வளர்ந்து இருக்கும்..
உங்களுக்கு பக்க கிளைகள் அதிகம் வேண்டும் என்றால் நுணியில் கில்லி விடவும்...
11 மாதம் பூ பூக்கும்...
பூக்கும் போது அதிகம் பூ பூக்க பொட்டாசியம் ஊக்கி பயன்படுத்வும்...
30 நாள் ஒருமுறை மண்புழு உரம் தூவிடலாம்.
பிரசன்னா திருச்சி......

Comments
Post a Comment